தஞ்சாவூர்,
ரூ.5 கோடி லஞ்சம் குறித்த ஏ டு இசட் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரின் புகாரை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவருடைய வீட்டில் 6 மணி நேரம் சோதனை நடந்தது.
தஞ்சை ரகுமான்நகர் 3-வது குறுக்குதெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் சரவணன் (வயது37). இவர் பங்குதாரருடன் இணைந்து தஞ்சை வல்லம் ரோட்டில் ஏ டு இசட் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்த ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையில் பங்குதாரர்களுக்கு இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் ஆஸ்பத்திரியை மூட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கு எதிராக சரவணன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திலும், தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடமும் புகார் அளித்தார்.
எதிர் தரப்பினரும் ஐ.ஜி.யிடம் புகார் அளித்தனர். இந்தநிலையில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் சரவணன், அவரது சித்தப்பாவும், நிர்வாக சேர்மனுமான ஆர்.எம்.பாஸ்கரன், ஆஸ்பத்திரி மேலாளர் பாஸ்கர் ஆகியோர் மீது மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பி ரிவு உள்பட 3 பிரிவுகளின் கீழ் ஆர்.எம்.பாஸ்கரனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையில் உள்நோக்கத்துடன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எங்களை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் போலீஸ் உயர் அதிகாரி செயல்பட்டு வருகிறார். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும். எங்கள் ஆஸ்பத்திரி விவகாரங்களில் சட்டத்துக்கு புறம்பாக இடையூறு செய்யும் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக டி.ஜி.பி.யிடம் சரவணன் புகார் மனு அளித்தார்.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஏ டு இசட் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் சரவணனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீ சார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் போலீஸ் துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க போலீஸ் துறையின் உயர் அதிகாரி ரூ.5 கோடி வரை கேட்டதாகவும், இதில் ரூ.3% கோடியை ரொக்கமாகவும், ரூ.1 கோடியே 75 லட்சத்தை காசோலையாகவும் போலீஸ் தரப்பிடம் வழங்கியதாகவும் தெரி வித்தார். இதைத்தொடர்ந்து பங்குதாரர்கள் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் வசித்து வரும் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டுக்கு நேற்று காலை 6 மணி அளவில் 3 கார்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 10 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர்.
மேலும் இன்ஸ்பெக்டர் சுகுமாறனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையும், விசாரணையும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இந்தநிலையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் சுகுமாறனை சி.பி.சி.ஐ.டி. போலீ சார் அதிடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நெஞ்சுவலிப்பதாக கூறியதை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள், வீடியோ பதிவுகளை கைப்பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.