தூத்துக்குடி,
தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. (பொறுப்பு) செல்வராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்பட சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் நேற்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் சந்திப்பிலிருந்து பிரையன்ட்நகர் வரை நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டனர்.
நடை ரோந்து மேற்கொண்ட போலீசார், குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் காவல்துறை ஏ.டி.எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி. தலைமையில் மாவட்டம் முழுவதும் மேற்கண்டபடி நடைரோந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.