திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 60). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாடசாமியின் மனைவி ஆனந்தவல்லி என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில், அதே தெருவை சேர்ந்த முதியவரான சுப்பு (வயது 70) என்பவர், ஆனந்தவல்லியிடம் சென்று பிரச்சினைக்குரிய அந்த இடத்தை சுட்டிக்காட்டி, "இது உன் இடம், நீ இங்கேயே வீடு கட்டு" என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதை பார்த்த செல்லப்பா மகன் சங்கர் (30) என்பவர், “நீ என்ன அவளுக்கு ஆதரவா?” என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரும்புக்கம்பியால் சுப்புவின் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த சுப்பு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வருகின்றனர்.