கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றிப் பணிவுடன் நினைவுகூரும் நாளே காவலர் வீரவணக்க நாள்! - நயினார் நாகேந்திரன் பதிவு

காவல்துறையின் தியாகம் நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நன்றியுணர்வையும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது.

சென்னை,

காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றிப் பணிவுடன் நினைவுகூரும் நாளே காவலர் வீரவணக்க நாள் என்று தமிழக பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் காக்கும் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல்துறை வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றிப் பணிவுடன் நினைவுகூரும் நாளே காவலர் வீரவணக்க நாள்!

சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காகத் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றும் காவல்துறையினரின் அர்ப்பணிப்பும், துணிச்சலும், தியாகமும் என்றும் போற்றுதலுக்குரியவை. அவர்களின் தியாகம் நம் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நன்றியுணர்வையும் பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது.

நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு நமது இதயபூர்வமான வீர வணக்கங்களைச் செலுத்துவோம்!

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT