தமிழக செய்திகள்

சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்பு

அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்றேன்.

சென்னை,

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

போலியோ சொட்டு

போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம்" என்ற குறிக்கோளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்றேன்.

பிறந்த குழந்தைகள் தொடங்கி ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதன்மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து பெறாத பெற்றோர்கள், உங்கள் அருகில் உள்ள முகாமுக்கு சென்று தங்கள் குழந்தைகளுக்கான சொட்டு மருந்தினை கொடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.