வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி வலுவிழந்து உள்ளது. எதிர்க்கட்சியாக அந்த கட்சியால் செயல்பட முடியவில்லை. சும்மாவே பாஜக சிக்சர் அடிக்கும். இவர்கள் இப்படி இருப்பதால்தான் பாஜக வெளுத்து வாங்குகிறது. இப்போது கூட தொகுதி மறுவரையறை மசோதாவில் காலம் கடந்த பிறகு தான் திமுகவையே வந்து சந்திக்கிறார்கள்.சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் இந்த மசோதா நிறைவேறிய பிறகு கண்டிப்பாக அமைச்சரவையில் மாற்றம் வரும். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒருத்தர் அமைச்சராக வருவார்.எப்போதும் பாஜக கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக இப்போது ஆதரவு அளிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் இனி புனிதர்களாக மாறிவிடுவார்கள்.
திமுக பக்கமே இனி சிபிஐ வராது. அமலாக்கத்துறை வராது. அடுத்த ஆறு மாதத்திற்குள் இது எல்லாம் நடக்கும். திமுக ஒன்னும் மகாத்மா காந்தி கிடையாது. அவங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பெற்றுவிட்டு தான் செய்யுறாங்க.. வி த லீடர்ஸ் அமைப்பை பொறுத்தவரைக்கும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கும். நிச்சயமாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்.. திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்கத் தான் போகிறார்கள். அதை நீங்களும், நாங்களும் பார்க்கத் தான் போகிறோம். என்று கூறினார்.