சென்னை,
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்புகள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக மட்டுமே வினியோகிப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு ஊழியர் சம்மேளனமும் (சி.ஐ.டி.யூ) இதனை வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த அரசியல் கட்சியினர் தலையீடும் இருக்க கூடாது. ரேஷன் கடை ஊழியர்களை சுதந்திரமாக பணியாற்ற விட வேண்டும். பொங்கல் பரிசு வழங்குவது சிறப்பு பணியாகும். எனவே இந்த பொருட்கள் வழங்கும் நாட்களில் ஒரு அட்டைக்கு ரூ.5 ரூபாய் வீதம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறினார்.