தமிழக செய்திகள்

மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கும் பூங்கோரை பாசிகள்!

பாசிகள் கரை ஒதுங்கும் போது கடல் பகுதியில் உள்ள சிறிய வகை மீன்கள் தங்காது என்று சொல்லலாம்.

மண்டபம்,

மண்டபம் தெற்கு துறைமுகத்தை ஒட்டிய கடலோர கரை பகுதியில் பூங்கோரை எனும் ஒரு விதமான பாசிகள் கரை ஒதுங்கி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கையாகவே பல வகையான பாசி, இயற்கை தாவரங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இதனிடையே மண்டபம் தெற்கு துறைமுகத்தை ஒட்டிய கடலோர கரை பகுதியில் பூங்கோரை எனும் ஒரு விதமான பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன.

மீன்கள் தங்காது

இது போன்ற பாசிகள் கரை ஒதுங்கும் போது கடல் பகுதியில் உள்ள சிறிய வகை மீன்கள் தங்காது என்று சொல்லலாம். காற்றின் வேகம், கடல் நீரோட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப கடல் பகுதியில் மிதந்து வரும் இந்த கடல் பாசிகள் தானாகவே அழிந்து கரை ஒதுங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று பூங்கோரை பச்சை பாசிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன், மண்டபம் வேதாளை வரையிலான கடல் பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கி ஏராளமான மீன்களும் செத்து மிதந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT