தமிழக செய்திகள்

போர் பதற்றங்களுக்கு மத்தியில்.. வைரலான எருமை உருவத்தை வைத்து டிரம்பை கிண்டல் செய்த ஈரான்

சுமார் 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமை, வெளிர் நிற தோல் மற்றும் முடியால் தனித்துவமாக காணப்படுகிறது.

தெஹ்ரான்,

இணையத்தில் சில விலங்குகள் அவற்றின் வித்தியாசமான தோற்றம் அல்லது தனித்துவமான குணாதிசயங்களால் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் 2 எருமை மாடுகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன. அவற்றின் தோற்றம் மட்டுமல்லாமல், சூட்டப்பட்டுள்ள பெயர்களும் நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தி இருந்தது.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் சுமார் 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமை, வெளிர் நிற தோல் மற்றும் முடியால் தனித்துவமாக காணப்படுகிறது. குறிப்பாக அதன் தலைமுடி அமைப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சிகை அலங்காரத்தை ஒத்திருக்கிறது. இதனால் அந்த எருமைக்கு 'டொனால்டு டிரம்ப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா கூறுகையில், “உருவத்தில் டிரம்பை போல இருந்தாலும், இந்த எருமை மிகவும் அமைதியானதும் சாதுவானதும் ஆகும்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார். இதேபோல், நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் வளர்க்கப்படும் 750 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட எருமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில் வைரலான எருமை உருவம் கொண்ட படத்தை வெளியிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை ஈரான் கிண்டல் செய்துள்ளது

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை டேக் செய்து ஈரான் (ரஷியா) தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பாவம்..!.. டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டதால் வங்கதேச எருமை வருத்தமடைந்தது.

RT: டிரம்ப்பை ஒத்த தோற்றமுடைய ஒரு வங்கதேச எருமையைப் பார்க்க மக்கள் திரண்டதால், அதற்குப் பசியே எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.