சென்னை,
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலைக்கு அதிகம் பேர் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விழுப்புரத்தில் இருந்து வரும் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் அன்று காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து அன்று (31-ந்தேதி) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது. 8 பெட்டிகளை கொண்ட இந்த மெமு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில், வெங்கடேசபுரம், மாம்பலபட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர்,அந்தம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.