தமிழக செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.!

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக 1வது நிலையில் 1வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக 1வது நிலையில் 1வது அலகில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 210 மெ.வா. மின் உற்பத்தி தொடங்கியது.

SCROLL FOR NEXT