தூத்துக்குடி,
கருங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட மின்தடையால் செல்போன் வெளிச்சத்தில் செவிலியர் ஊசி போட்ட சம்பவம் வேதனையளிக்கிறது என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எனது தூத்துக்குடி தொகுதியில், திருவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரும் பழுதாகியிருந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட வேண்டிய நிலை செவிலியருக்கு ஏற்பட்டிருக்கிறது.
எத்தனை முறை கண்டித்தாலும் தவெக அரசு திருந்துவதாகத் தெரியவில்லை. இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் மக்களின் உயிரைக் காக்கப் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது பாராட்டுகள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.