தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 20-ந்தேதி நள்ளிரவில் வில்லிவாக்கம், திருவொற்றியூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில், மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் அதிகளவில் மின் வெட்டு. கோடைக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.