தஞ்சாவூர்,
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு மற்றும் மின்பாதை பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, வருகிற 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதி களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி ஸ்டேடியம் மின்வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜி நகர், சீதாந கர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர் பகுதிகளிலும், திலகர் திடல் மின்வழித் தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி ரோடு. மேல அலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக் கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர் பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.