திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கோடை விடு முறை என்பதாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும். அம்மணி அம்மன் கோபுரம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள காத்திருப்பு கூடத்தின் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரிசையானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள காத்திருப்பு கூடத்தில் உள்ள 8 அறைகளையும் தாண்டி வடஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.
இந்தநிலையில் திருவண்ணாமலையில் நேற்று இரவு திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. கிரிவலப் பாதையில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் டார்ச் லைட் வெளிச்சத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை இருளில் கிரிவலம் சென்றனர். மின் வெட்டு துண்டிப்பால் பக்தர்கள் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் கிரிவல பாதையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மின் வெட்டு துண்டிப்பால் எதிரில் யார் வருவது செல்வது தெரியாமல் மக்கள் அச்சத்திலேயே கிரிவலம் சென்றனர்.