தமிழக செய்திகள்

அறந்தாங்கி, நாகுடி பகுதிகளில் நாளை மின்தடை

அறந்தாங்கி, நாகுடி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

அறந்தாங்கி:

அறந்தாங்கி, அழியாநிலை, நாகுடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இ்ங்கிருந்து மின்வினியோகம் பெறும், அறந்தாங்கி நகர் பகுதி, அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி குரும்பூர், மறமடக்கி, ரெத்தினகோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், நாகுடி, அத்தானி, தொண்டைமாநேந்தல், மேல்மங்களம், பெருங்காடு, திணையாகுடி, மேலப்பட்டு, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.