தமிழக செய்திகள்

பிரக்ஞானந்தா மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை,

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்!

உலகின் முன்னணி வீரர்களை எதிர்கொண்டு, தனது அபாரமான திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இந்த வெற்றியை அவர் பெற்றிருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை. தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.