தமிழக செய்திகள்

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம்

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார்.

கேசவ விநாயகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பதவியில் இருந்து வந்தார். ஆர்.எஸ்.எஸ். முகாமில் இருந்து வருபவர்கள் மட்டுமே இந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள். தற்போது கேசவ விநாயகம் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.