தமிழக செய்திகள்

“மாற்றம், மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்து..” - நா.த.க. வேட்பாளர் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாற்றம், மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ள கைது நடவடிக்கையை தீர்வாக கருதுவது எந்த வகையில் நியாயம்? என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிகாலை 5,30 மணி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பளர் கார்த்திகா அவர்களை அதிகாலை 5,30 மணியளவில், அவர் இரவு உடையான நைட்டியின் இருந்தபோது, உடை மாற்றிக்கொள்ளக்கூட அவகாசம் வழங்காமல் காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாணை நடத்தி வருவதாகக் கூறப்படும் சம்பளம் மிகுந்த கண்டனத்திற்குரியது.

தவறான முன்னுதாரணம்

தேர்தல் நோத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டதற்காக ஒரு பெண்ணை அதிகாலை நேரத்தில் இத்தகைய முறையில் கைது செய்வதுதான் தீர்வா என்பதைத் தமிழக அரசும், ஆளுங்கட்சியினரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண் என்று கூடப்பாராமல், உடை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்காமல் இரவு உடையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவது, பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொள்ளாத செயலாகும். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

கைது நடவடிக்கை ஏன்..?

"மாற்றம், மாற்றம்' என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைத்துள்ளன. எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, கார்த்திகா அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT