மகேஷ் குமார் அகர்வால் 
தமிழக செய்திகள்

இணையவழி நிதி மோசடி தடுப்பு: வங்கி அதிகாரிகளுடன் தமிழக சைபர் கிரைம் பிரிவு ஒருங்கிணைப்புக் கூட்டம்

சைபர் குற்ற உதவி எண் 1930 குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சென்னை,

இணையவழி நிதி மோசடி தடுப்பு: வங்கி அதிகாரிகளுடன் தமிழக சைபர் கிரைம் பிரிவு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

உயர்மட்ட கூட்டம்

தமிழ்நாடு இணையவழிக் குற்றப்பிரிவின் சார்பில். இணையவழி நிதி மோசடிகள் மற்றும் அவற்றைத் தடுப்பது தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும். வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை ஆராயவும், தமிழ்நாட்டை சேர்ந்த வங்கிகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், இணையவழிக் குற்றப்பிரிவுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளிகளைக் கண்டறிந்து. இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மகேஷ் குமார் அகர்வால்

மாநில அளவிலான சைபர் நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம். நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக மாநாட்டு கூடத்தில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இணையவழிக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் அபின் தினேஷ் மொடக், மற்றும் இணையவழிக் குற்றப்பிரிவின் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு

காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் பாரம்பரிய குற்றங்களுக்கும் இணையவழிக் குற்றங்களுக்கும் இடையிலான நிதி இழப்பின் தாக்கத்தில் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைத்ததுடன், அவை தொடர்பான செலவு-பயன் பகுப்பாய்வு குறித்தும் விளக்கினார். மேலும், இணையவழி குற்றங்களை பொறுத்தவரையில், விழிப்புணர்வே மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என வலியுறுத்தினார்.

சைபர் குற்ற உதவி எண் 1930

இதன் அடிப்படையில் சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை வங்கிகளின் கணக்கு புத்தகங்கள். காசோலைப் புத்தகங்கள். இணையதளங்கள். கைப்பேசி செயலிகள், ஏ.டி.எம். மையங்கள் மற்றும் வங்கி கிளைகளில் அச்சிட்டு, சைபர் குற்ற உதவி எண் 1930 குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை வங்கிகள் முனைப்புடன் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

குறைகளை தீர்க்கும் வழிமுறை

இக்கூட்டத்தில், மியூல் வங்கிக் கணக்குகள் அதிகரித்து வருவது, ஏபிஐ அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை முடக்குவது, பணம் மோசடி செய்யப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கும் வழிமுறை மூலம் இழந்த தொகையை மீட்டளிப்பது. குறைகளை தீர்க்கும் வழிமுறை மூலம் குறைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவது உள்ளிட்ட தொடர்புடைய பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மியூல் வங்கி கணக்கு

அடையாளம் காணப்பட்ட மியூல் வங்கி கணக்குகள் குறித்து வங்கிகள் விரிவான ஆய்வை மேற்கொண்டு. அவற்றில் காணப்படும் செயல்பாட்டு முறைகளை கண்டறிய வேண்டும் என்றும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகள் மியூல் கணக்குகளாக மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தணிக்கை நடவடிக்கை

மேலும், அடையாளம் காணப்பட்ட வங்கிக் கணக்குகள் இணையவழிக் குற்றங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட உரிய தணிக்கை நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

புகார் அளித்தல்

மேற்கண்ட சந்தேகித்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தாலோ, உடனடியாக நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும். இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்க, சைபர் குற்றங்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 1930-வகையிலான மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என தொடர்புகொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT