தமிழக செய்திகள்

காங்கிரசில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார்; ப.சிதம்பரம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்காக நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெறும் என கூறினார்.

சென்னை,

தவெகவுடன் எந்த சர்ச்சையும் இல்லை, காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தவெக - காங்கிரஸ் கூட்டணி

கடந்த சட்டசபைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தற்போது தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முதல்-அமைச்சர் விஜய்-ஐ முன்னிறுத்துவோம் என தவெகவினர் கூறி வருகின்றனர். அதே கருத்தையே தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் கூட்டணியில் ராகுல்காந்தி நான் பிரதமர் வேட்பாளர், ஆர்வம் மிகுதியின் காரணமாக தவெகவினர் முதல்-அமைச்சர் விஜய்-ஐ பிரதமர் வேட்பாளர் என்று கூறி வருகின்றனர். அவர்கள் இன்னும் ரசிகர் மன்ற மன நிலையில் தான் உள்ளனர் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார். இதே கருத்தைத்தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களும் கூறி வருகின்றனர்.

ப.சிதம்பரம் பேட்டி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு இன்று சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது

முதல் 100 நாள் தவெக ஆட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்து வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தவெகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே எந்த வித சர்ச்சையும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்காக நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெறும்

என்றார்.

SCROLL FOR NEXT