தமிழக செய்திகள்

இந்தியை திணிக்கிறார் பிரதமர் மோடி: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் எங்கள் அடையாளம்.. மொழித் திணிப்புக்கு என்றும் இடமில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான வேறுபாடு தமிழ்நாட்டில் தெளிவாகத் தெரிகிறது!

நேற்று, அன்பு தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டு மக்களிடம் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றினார்.

மொழி, பண்பாடு

இன்று மோடியும் தொடக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, பின்னர் இந்தியில் தொடர்ந்து பேசிவருகிறார். https://youtube.com/live/LXX4nP3BQwM?si=wLVuFX6oa6PiLkdd இது இந்தி திணிப்பு .

தமிழ்நாடு தனது மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றில் பெருமை கொள்ளும் மண். எல்லா மொழிகளையும் வரவேற்கிறோம். ஆனால், ஒரு மொழியை மற்ற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

மொழித் திணிப்பு

ஒரு மொழியைக் கற்பது அவரவர் விருப்பம்; ஒரு மொழியைத் திணிப்பது அரசியல் நோக்கம்!

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஒரு மொழியைத் திணிப்பதில் அல்ல, அனைத்து மொழிகளையும் மதிப்பதில்தான் இந்தியாவின் ஒற்றுமை அடங்கியிருக்கிறது.

தமிழ் எங்கள் அடையாளம்!

மொழித் திணிப்புக்கு என்றும் இடமில்லை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT