தமிழக செய்திகள்

பிரதமர் மோடி இன்று நாகர்கோவில் வருகை: 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா கட்சியினர் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலமாக மாலை 3 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு வருகிறார்.

அங்கிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை 1 கி.மீ. தூரத்துக்கு 'ரோடு ஷோ' நிகழ்ச்சி ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றவாறு மக்களை சந்தித்து குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜனதா மற் றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதில் தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ரோடு ஷோ நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6 மணிக்கு மீண்டும் கார் மூலம் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்க உள்ள 'ரோடு ஷோ' நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா கட்சியினர் செய்துள்ளனர். நாகர்கோவில் வேப்பமூடு சந் திப்பு காமராஜர் சிலை முதல் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று பிரதமரை காணும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜனதா தொண்டர்களும், பொதுமக்களும் நெல்லை. தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜனதா தொண்டர்களும் பல் லாயிரக்கணக்கில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.