தமிழக செய்திகள்

பிரதமர் சென்னை வருகை: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பிரதமரின் வருகையை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையாளர் முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

பாரதப் பிரதமரின் சென்னை வருகையினை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் மெட்ரோ பகுதி மற்றும் ஐஐடி மெட்ராஸ் வளாகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பாரதப் பிரதமர் 11.09.2026 அன்று சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு, இன்று (09.10.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வளசரவாக்கம் மண்டலத்தில் போரூர் மெட்ரோ பகுதி, அடையாறு மண்டலத்தில் ஐஐடி மெட்ராஸ் வளாகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணி உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டல அலுவலர்கள் எஸ்.முருகதாஸ், என்.காளிதாஸ், என்.தட்சிணாமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT