தமிழக செய்திகள்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்... சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம்

சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

பரபரப்பு

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

ஒருமனதாக நிறைவேறுமா?

சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேச உள்ளனர். தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர், சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.