தமிழக செய்திகள்

நெல்லையில் கைதி தப்பியோட்டம்; 2 போலீசார் பணியிடை நீக்கம்

நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஒரு கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றபோது, சிறை வாசல் அருகே அவர் திடீரென தப்பியோடினார்.

திருநெல்வேலி,

நெல்லையில் கைதி ஒருவர் தப்பியோடியது தொடர்பாக 2 போலீசாரை மாவட்ட எஸ்.பி. அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கைதி தப்பியோட்டம்

திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகக்கனி (வயது 22) என்ற கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். சிறை வாசல் அருகே அவர் திடீரென தப்பியோடினார்.

2 போலீசார் பணியிடை நீக்கம்

டிரோன் மூலம் தேடியும் அவர் சிக்கவில்லை. இதையடுத்து கைதியை தேட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கைதியை தப்பவிட்டதாகக் கூறி, போலீஸ் ஏட்டுகள் மல்லி கைராஜ் மற்றும் பார்வதி ஆகிய 2 பேரை பணி இடைநீக்கம் செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.