தமிழக செய்திகள்

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு: சிறையில் சக கைதிகள் தாக்கியதில் கைதி கார்த்திக் காயம்

கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான கார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மே 22-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சூலூர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (33), இவருக்கு உடந்தையாக இருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகன்ராஜ் (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்களில் போலீசார் விசாரணையின்போது தப்ப முயன்ற கார்த்தி மாடியில் இருந்து குதித்ததில் கை, கால் முறிந்து கோவை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மோகன்குமார் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், கோவை சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான கார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்ட கார்த்தியை சக கைதிகள் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சக கைதிகள் தாக்கியதில் கார்த்தி பலத்த காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.