கடலூர்,
தனியார் பேருந்து தடுப்பு சுவர் மோதிய விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வழியே தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள வேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மேல் பயங்கரமாக மோதியது. இதில், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். ஓட்டுநர் பாட்டு கேட்டபடி அலட்சியமாக பேருந்து ஓட்டியதால் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர். பின்னர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.