தமிழக செய்திகள்

லிப்டில்' பயணித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை - தனியார் நிறுவன ஊழியர் கைது

வணிக வளாக 'லிப்டில்' பயணித்த 2 ஆசாமிகள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது தோழியுடன் அண்ணாசாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு நேற்று பொருட்களை வாங்க சென்றிருந்தார். வணிக வளாக 'லிப்டில்' அந்த பெண் தனது தோழியுடன் செல்லும்போது, அதே 'லிப்டில்' பயணித்த 2 ஆசாமிகள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர்.

2 பெண்களும் கூச்சல்போட்டனர். 'லிப்ட்' நிறுத்தப்பட்டு, வணிக வளாகத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசாமிகளும் தப்பி ஓடினார்கள். இவர்களில் ஒருவரை பிடித்து அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபரின் பெயர் லட்சுமி நாராயணன் (வயது 41) என்பதாகும். வேளச்சேரியை சேர்ந்த அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார். அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தப்பி ஓடிய இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.