தமிழக செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பைசல்கான் (வயது 21). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 23-ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊரான சின்னியம்பாளையத்துக்கு வந்திருந்தார். அவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சாவடிப்பாளையம் அருகே உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

நண்பர்களுடன் குளித்த அவர், ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.