தமிழக செய்திகள்

தனியார் நிறுவன உரிமையாளர் காரில் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

சென்னை அடுத்த துரைப்பாக்கம் 200 அடி சாலையோரம் கேட்பாரற்று நின்றிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

சென்னை,

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் மாதவன் (வயது 57). இவர் அரும்பாக்கத்தில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்ரி(51).

கணவர் மாயம்:

கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்து காரில் வெளியே சென்ற மாதவன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. தனது கணவர் மாயமானதாக துரைப்பாக்கம் போலீசில் அவரது மனைவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

மர்ம மரணம்:

இந்த நிலையில் துரைப்பாக்கம் 200 அடி சாலையோரம் கார் ஒன்று கேட்பாரற்று நின்றிருந்தது. அதன் பின் இருக்கையில் ஒருவர் இறந்து கிடப்பதாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, அது மாயமானதாக கூறப்பட்ட மாதவன் என்பது தெரிந்தது. அவர் உடல்நிலை சரியில்லாமல் காருக்குள் இறந்து கிடந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.