திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் இணைந்து தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் தனியார் துறை வேவைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
8,10,12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் கலந்துகொள்ள வேண்டும்.
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேவைய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கெண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.