தமிழக செய்திகள்

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தகவல் உரிமைச்சட்டம் வார விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தகவல் சட்டம் பற்றிய வகுப்புகள், கட்டுரை போட்டிகள், வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சாஸ்திரி தலைமை தாங்கினார். வத்திராயிருப்பு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பால நாகராஜன் தீவிபத்தை தடுப்பது குறித்தும், தகவல் உரிமைச்சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாணவர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

SCROLL FOR NEXT