வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் 3வது டெண்டரை வெளியிட்டது. நவம்பர் முதல் மே வரை மாலை நேர மின்சார தேவையை சமாளிக்க மாதந்தோறும் 1,000 மெகாவாட் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மொத்தம் 7,000 மெகாவாட் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் குறுகிய கால டெண்டர் கோரியது. தினமும் மாலை 6 - இரவு 12 மணி வரை ஏற்படும் உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது
ஏற்கனவே 4 ஆயிரம் மெகாவாட் மற்றும் 15 ஆயிரம் மெகாவாட் என இரண்டு டெண்டர்கள் மின்வாரியம் தரப்பில் கோரப்பட்டு இருந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக மின்வாரியம் இந்த டெண்டரை வெளியிட்டதாக கூற்ப்படுகிறது.