சென்னை,
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றி வந்த 8 உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் விவரம் வருமாறு:
1. சென்னை மாநகராட்சி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ச.சிவக்குமார், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. கன்னியாகுமரி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.செல்வலெட் சுஷ்மா, தர்மபுரி அரசு போக்குவரத்து கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. திருச்சி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்மு.சுதாகர், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. வேலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்என்.ஜி.நந்தகுமார், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. ஆளுநர் மாளிகை உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கே.எம்.எஸ்.முகமது ரியாஸ், அதே அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
6. ராமநாதபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்என்.விஜயகுமார், மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. காஞ்சிபுரம் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்எஸ் எஸ்.சதீஷ் பாபு, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சென்னை தலைமை செயலகம் செய்தி வெளியீட்டு பிரிவு உதவி மக்கள் தொடர்பு அலுவலர்எம்.கேசவமூர்த்தி, அதே பிரிவில் மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.