தமிழக செய்திகள்

பத்திரப்பதிவு துறையில் 278 பேருக்கு பதவி உயர்வு-17 பேர் பதவி இறக்கம்

2-ம் நிலை சார்பதிவாளர் பதவியில் இருந்த 17 பேர் மீண்டும் உதவியாளர் பதவிக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையில் 278 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 17 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர் பாக பதிவுத்துறை தலைவர் அருண் தயாள் சுந்தர் உத்தரவு பிறப்பித்துள் ளார். இதன்படி, 2020-21-ம் ஆண்டு முதல் 2026-27-ம் ஆண்டு வரை பணி மாற்றம் மூலம் 2-ம் நிலை சார்பதிவாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 158 உதவியாளர்கள், 2-ம் நிலை சார்பதிவாளர்களாக பதவி உயர்வு பெற் றுள்ளனர்.

அதேபோல், ஏற்கனவே 2-ம் நிலை சார்பதிவாளர்களாக பணி யாற்றி வந்த 120 பேர், 1-ம் நிலை சார்பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன்மூலம் பதிவுத்துறையில் மொத்தம் 278 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 2-ம் நிலை சார்பதிவாளர் பதவியில் இருந்த 17 பேர் மீண்டும் உதவியாளர் பதவிக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 278 பேருக்கு பதவி உயர்வும், 17 பேருக்கு பதவி இறக்கமும் செய்யப்ப்ட்டுள்ளன.

SCROLL FOR NEXT