தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூல் முகாம் இன்று முதல் தொடக்கம்

சொத்து வரியை வசூலிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளது. சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் வருவாய் கிடைக்கிறது.

சொத்துவரி

இதனிடையே, சொத்துவரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டபோதும் ஆயிரக்கணக்கானோர் சொத்து வரியை இதுவரை செலுத்தாம உள்ளனர். இதையடுத்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூல் முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் அனைத்து மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பு முகாம் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை முகாம்களில் சொத்து உரிமையாளர்கள் வரி செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.