தமிழக செய்திகள்

சென்னையில் நாளை முதல் சொத்துவரி வசூல் முகாம்

சென்னையில் நாளை முதல் சொத்துவரி வசூல் முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் (03.07.2026) ஜூலை 17ம் தேதி வரை நிலுவை சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி

சென்னையில் அனைத்து மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பு முகாம் நடக்கிறது. காலை 8 மணி முதல், மாலை 6 மணி வரை முகாம்களில் சொத்து உரிமையாளர்கள் வரி செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.