தமிழக செய்திகள்

பொள்ளாச்சி அருகே மசாஜ் சென்டரில் விபசாரம்: மூன்று இளம் பெண்கள் கைது

மகாலிங்கபுரம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து வாடிக்கையாளர்களைப் போல அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி,

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் அவருடன் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆயுர்வேதிக் பிசியோதெரபி அக்குபஞ்சர் கிளினிக் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர்.

கைது

இந்த நிலையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து இன்று வாடிக்கையாளர்களைப் போல அதிரடி ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்கு மூன்று இளம் பெண்கள் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததது. இதனை தொடர்ந்து, சென்னை, சேலம், கோவை மாவட்டத்தைச் சென்ற மூன்று இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பிசியோதெரபி அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படும் என ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்களை முன்பதிவு செய்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்தது தெரிய வந்தது, இதனையடுத்து மூவரும் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் ஒருவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மற்ற இரு இளம் பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வந்த உரிமையாளர் அனீஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்

SCROLL FOR NEXT