சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதல்படி, இளைய சமுதாயத்தினர் போதைப் பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டோம்.
இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டுத்துறை, தொழில்துறை மற்றும் தகவல் தொலைத் தொடர்புத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், விளையாட்டு வீரர் - வீராங்கனையர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாகச் சிறப்புப் பாடத்திட்டங்களை வடிவமைப்பது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிர்வாக உதவிகள், தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவுப் பலன்களைப் பயன்படுத்துவது, தொழில்நுட்ப உதவியின் மூலம் 'Dashboard' வழியே மாணவ - மாணவியர்களின் திறன் மற்றும் தேவைகளைக் கண்காணிப்பது ஆகிய திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.