தமிழக செய்திகள்

வேடசந்தூரில் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூரில் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் வேடசந்தூர் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை தனியார் மயமாக்கக்கூடாது. பணிமனையில் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வேண்டும். பஸ்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு வேடசந்தூர் கிளை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கிளை பொருளாளர் முருகேசன் வரவேற்றார். இதில், மண்டல தலைவர் கருப்பணன், மண்டல பொது செயலாளர் மனோகரன், மாநில துணை செயலாளர் தமிழன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT