தமிழக செய்திகள்

சென்னை எண்ணூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மருத்துவமனை, தேவாலயம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை திருவொற்றியூர் தொகுதி நேரு நகரில் தனியார் மருத்துவமனை, தேவாலயம், மசூதி மற்றும் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT