தமிழக செய்திகள்

கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையாளர்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாகத் திட்டமிடுவதற்கும் முக்கியமான பணியாகும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர்கள் (Enumerators) தங்களது அடையாள அட்டையை காண்பித்து பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தேவையான விவரங்களை சேகரித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சம்மந்தமாக விவரம் வேண்டின், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய மண்டல அலுவலகங்கள்

மண்டலம் மண்டலத்தின் பெயர் தொடர்பு எண்

மண்டலம் – 1 திருவொற்றியூர் 9445190201

மண்டலம் – 2 மணலி 9445190202

மண்டலம் – 3 மாதவரம் 9445190203

மண்டலம் – 4 தண்டையார்பேட்டை 9445190204

மண்டலம் – 5 ராயபுரம் 9445190205

மண்டலம் – 6 திரு.வி.க. நகர் 9445190206

மண்டலம் – 7 அம்பத்தூர் 9445190207

மண்டலம் – 8 அண்ணா நகர் 9445190208

மண்டலம் – 9 தேனாம்பேட்டை 9445190209

மண்டலம் – 10 கோடம்பாக்கம் 9445190210

மண்டலம் – 11 வளசரவாக்கம் 9445190211

மண்டலம் – 12 ஆலந்தூர் 9445190212

மண்டலம் – 13 அடையாறு 9445190213

மண்டலம் – 14 பெருங்குடி 9445190214

மண்டலம் – 15 சோழிங்கநல்லூர் 9445190215

மேலும், பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளைப் பெறலாம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்/சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.