தமிழக செய்திகள்

மக்கள் தீர்ப்பு வேறு, கருத்துக்கணிப்பு வேறு; - செங்கோட்டையன் பேட்டி

கருத்து கணிப்பு என்பது குறிப்பிட்ட நபர் குறிப்பிட்டு சொல்வது என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து இருந்தன.

மேற்குவங்காளத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந் ததை தொடர்ந்து, அனைத்து நிறுவனங்களும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.

அதில் தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. அதே நேரம் அ.தி.மு.க.வுக்கு கணிசமான இடங்களும், த.வெ.க. இரட்டை இலக்க தொகுதிகளை பெறும் என்றும் அந்த முடிவுகள் கூறுகின்றன.

இந்தநிலையில், தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மக்கள் தீர்ப்பு வேறு, கருத்துக்கணிப்பு வேறு; தவெக 200 இடங்களில் வெற்றி பெறும். அனைத்து தேர்தல் கருத்து கணிப்புகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்து கணிப்பு என்பது குறிப்பிட்ட நபர் குறிப்பிட்டு சொல்வது.

விசில் புரட்சி நடந்துள்ளது; 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார்.