தமிழக செய்திகள்

வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்..! - சென்னை மாநகராட்சி

வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாமக மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டார். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை முறையாகத் திட்டமிடுவதற்கும் முக்கியமான பணியாகும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தகவல் அளிக்கலாம்

தங்களது குடும்பம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை எனில், கீழே குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை (Charge Officer) தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை சிறப்பாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளும் வகையில், கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குத் தேவையான தகவல்களை வழங்குவது கட்டாயமாகும்.

தொடர்பு கொள்ள வேண்டிய மண்டல அலுவலகங்கள்

  • மண்டலம் - மண்டலத்தின் பெயர் -தொடர்பு எண்

  • மண்டலம் – 1 திருவொற்றியூர் 9445190201

  • மண்டலம் – 2 மணலி 9445190202

  • மண்டலம் – 3 மாதவரம் 9445190203

  • மண்டலம் – 4 தண்டையார்பேட்டை 9445190204

  • மண்டலம் – 5 ராயபுரம் 9445190205

  • மண்டலம் – 6 திரு.வி.க. நகர் 9445190206

  • மண்டலம் – 7 அம்பத்தூர் 9445190207

  • மண்டலம் – 8 அண்ணா நகர் 9445190208

  • மண்டலம் – 9 தேனாம்பேட்டை 9445190209

  • மண்டலம் – 10 கோடம்பாக்கம் 9445190210

  • மண்டலம் – 11 வளசரவாக்கம் 9445190211

  • மண்டலம் – 12 ஆலந்தூர் 9445190212

  • மண்டலம் – 13 அடையாறு 9445190213

  • மண்டலம் – 14 பெருங்குடி 9445190214

  • மண்டலம் – 15 சோழிங்கநல்லூர் 9445190215

  • தலைமையிடம் 1913

பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

எனவே, தங்களது குடும்பம் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால், மேற்கண்ட தொடர்பு எண்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.