தமிழக செய்திகள்

புதுச்சேரி வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனை கைதி கருணாஸ் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

கருணாசை காணொலியில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை,

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விவேகானந்​தன், கடந்​த 2024 செப்​டம்​பரில் சிறைக் கழி​வறை​யில் தற்​கொலை செய்து கொண்​டார்.

இதையடுத்து, மற்றொரு குற்றவாளியான கருணாசுக்கு எதிரான வழக்கை விசாரித்த புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2026 மே 8 ஆம் தேதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜூன் 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி கருணாசுக்கு உத்தரவிட்டனர். அன்றைய தினம், கருணாசை காணொலியில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT