புதுக்கோட்டை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை முதல்-அமைச்சர் விஜய் விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். அவர் சென்ற விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதை தொடர்ந்து, அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை புறப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சுமார் 49 கி.மீ. தூரம் தனது வாகனத்தில் சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் விஜய் பயணம் செய்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் பர்வேஸ் முதல்-அமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்க்கு புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பாரம்பரிய பயிர் வகைகளின் கண்காட்சி, மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் சுயதொழில்கள் தொடர்பான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார். அங்கிருந்த விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து, சத்யமூர்த்தி சாலையில் ரூ.23.25 கோடியில் புனரமைத்து கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். கடந்த 2024-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர், அங்கு பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை வசதிகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காத்திருப்பு அறைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இந்த திறப்பு விழாவின்போது அமைச்சர்கள் ஆனந்த், பர்வேஸ், எம்.பி.க்கள் துரை வைகோ, நவாஸ்கனி, ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.