தமிழக செய்திகள்

புதுக்கோட்டை: பணமோசடி புகாரில் த.வெ.க. நிர்வாகி கைது

வடமாநிலத்தில் பதுங்கி இருந்த த.வெ.க. நிர்வாகி சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் 100 பேரிடம் அதிக வட்டி தருவதாக கூறி 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100 பேர் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வடமாநிலத்தில் பதுங்கி இருந்த த.வெ.க. நிர்வாகி சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.