தமிழக செய்திகள்

தமிழகத்தில் மின் தேவையை சமாளிக்க ‘தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல்’ - அதிகாரிகள் தகவல்

இத்திட்டம் நிதிச்சுமை மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியம் வடசென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடியில் உள்ள அனல் மின்சார நிலையங்கள் மற்றும் நீர் மின்சார நிலையம் உள்ளிட்ட தனது சொந்த மின்சார உற்பத்தி நிலையங்களை முழுமையாகச் சார்ந்திருப்பதில்லை.

கோடைகால மற்றும் கூடுதல் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து 40 சதவீதம் மின் சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது. 32 சதவீதம் மத்திய தொகுப்பிலிருந்தும், 28 சதவீதம் சொந்த உற்பத்தி நிலையங்களில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. இத்திட்டம் நிதிச்சுமை மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளது.

இதனால் மாநிலத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய, தனியாரிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. நீண்ட, குறுகிய, நடுத்தர கால ஒப்பந்தங்கள் மற்றும் தற்காலிகத் தேவைகளுக்காக ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6 முதல் ரூ.9 வரையிலான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.