தமிழக செய்திகள்

இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

1973-ம் ஆண்டு முத்தமிழைக் குறிக்கும் வகையில் ‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.

இயல், இசை, நாடக மன்றம்

மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காக கடந்த 1955-ம் ஆண்டு ‘தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம்’ என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பின்னர், 1973-ம் ஆண்டு முத்தமிழைக் குறிக்கும் வகையில் ‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள், நாட்டுப்புறக் கலை வடிவங்கள் மற்றும் கலைஞர்களை பாதுகாத்து, வளர்ப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அன்புமணி வாழ்த்து

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மக்கள் இசை பாணர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழிலும் வல்லமை பெற்ற முனைவர் புஷ்பவனம் குப்புசாமி இயல், இசை, நாடக மன்றத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT